டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2023-09-08 19:04 GMT


Full View


Live Updates
2023-09-09 14:42 GMT

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு பெரிய கப்பல் மற்றும் ரெயில் இணைப்பு வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற வரலாற்று ஒப்பந்தம் ஒன்றை பற்றி இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இன்று அறிவித்து உள்ளன.

2023-09-09 13:42 GMT

ஜி-20 உச்சி மாநாட்டில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநாட்டுக்கு அழைப்பு விடப்பட்ட மற்ற தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத் மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார்.

2023-09-09 13:26 GMT

ஜி-20 உச்சி மாநாட்டில் தலைவர்களின் தீர்மானம் பற்றி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தே கூறும்போது, இறுதியான ஒரு முடிவுக்கு நாங்கள் வந்து விட்டோம் என்பதே மிக நல்லது என நான் நினைக்கிறேன் என கூறினார்.

உக்ரைன்-ரஷியா போர் பற்றி அவர் கூறும்போது, ரஷியா-உக்ரைன் போர் விசயத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கிய விசயங்கள் ஆனது, அனைவராலும் நிர்வகிக்க கூடியது மற்றும் ஏற்று கொள்ள கூடியது என்று கூறியுள்ளார்.

2023-09-09 13:16 GMT

ஜி20 உச்சி மாநாட்டில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், உக்ரைன் போர் குறித்து ரஷியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ, அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று மிரட்டுவதையோ ஏற்க முடியாது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பிராந்தியங்களை கையகப்படுத்துவதற்காக அச்சுறுத்தல் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஐ.நா. தீர்மானத்தை மேற்கோள் காட்டி ரஷியாவை வெளிப்படையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

2023-09-09 12:48 GMT

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மாநாட்டில் பேசும்போது, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே வருங்காலம் என்பதே இந்த ஜி-20 உச்சி மாநாட்டின் மைய விசயம். மற்றும் பல வழிகளில், இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் நட்புறவுக்கான மையமும் கூட.

நீடித்த, உறுதியான உள்கட்டமைப்பு, தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை உருவாக்குவது மற்றும் ஒரு சிறந்த எதிர்காலம் உருவாக்குவது ஆகியவற்றை கட்டமைக்க வேண்டும்’ என்றார்.

2023-09-09 12:43 GMT

உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் உடனிருந்தனர்.

2023-09-09 11:45 GMT

ஜி-20 உச்சி மாநாட்டில் உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. சபை எடுத்த நிலைப்பாட்டை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உக்ரைனில் அமைதி நீடித்தால் ஐ.நா. சபையில் அனைத்து நோக்கங்கள், கொள்கைகள் நிலைநிறுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2023-09-09 11:42 GMT

பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

2023-09-09 11:42 GMT

அணு ஆயுதம் பயன்படுத்துவதையோ, அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக மிரட்டுவதையோ ஏற்க முடியாது என ஜி20 மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை தயாரித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ள நிலையில், ஜி20 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜி20 உறுப்பு நாடுகள் இடையே வணிகம் செய்வதை எளிதாக்கவும், செலவை குறைப்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வணிகம் செய்வதை எளிதாக்க தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்