டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்

Update: 2023-09-08 19:04 GMT
Live Updates - Page 2
2023-09-09 11:12 GMT

ஜி-20 சிறப்பு செயலாளர் முக்தேஷ் பர்தேஷி இன்று கூறும்போது, இந்தியாவின் வளம் நிறைந்த கலாசார பாரம்பரியம் பற்றி சுட்டி காட்டி பேசினார். ஜி-20 பயணத்தில் ஓர் அத்தியாவசிய பொருளாக, கலைபொருட்கள் அங்கம் வகிக்கின்றன.

நாட்டில், ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்பு என்பதனை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஜி-20 கூட்டங்கள் வழியே அவர்கள் இந்த ஊக்குவிப்பை பெற்றனர் என அவர் கூறியுள்ளார்.

நாடும், அதன் மக்களும் சுயசார்புடன் திகழ வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தும் நோக்கம் கொண்டது இந்த திட்டம். இதனால் நாட்டின் அனைத்து மாவட்டங்களும் சமஅளவிலான வளர்ச்சியை பெறும்.

2023-09-09 11:11 GMT

டெல்லி பிரகடனம் தொடர்பாக ஜி20 உறுப்பு நாடுகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. இதையடுத்து டெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்காக கடினமாக உழைத்த நமது அமைச்சர்கள், ஷெர்பாக்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் பேசினார்.

2023-09-09 10:51 GMT

ஜி20 உச்சி மாநாட்டின்போது, 'ஒரே குடும்பம்' என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

2023-09-09 10:44 GMT

உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி: மோடி அறிவிப்பு

ஜி20 உச்சி மாநாட்டில் 'ஒரே பூமி' என்ற தலைப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

எரிபொருள் கலப்பு விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதம் வரை அதிகரிக்க, உலக அளவில் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்பதே எங்கள் முன்மொழிவு. இதற்காக உலகளாவிய பயோ எரிபொருள் கூட்டணி அமைக்கப்படும். இந்த முயற்சியில் ஜி20 நாடுகள் சேரவேண்டும்.

மேலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை கண்காணிப்புக்கான ஜி20 செயற்கைக்கோள் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

2023-09-09 10:26 GMT

இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

2023-09-09 09:44 GMT

ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூத்த பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சேர்க்கைக்கு பிறகு, ஆப்பிரிக்க கண்டம் மற்றும் நாடுகளின் குரல் உலகளவில் வலுவடையும் என்றார். ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணையும் என்று தென் ஆப்பிரிக்கா எப்போதும் எதிர்பார்த்தது என்றும் அவர் தெரிவித்தார்.

2023-09-09 09:22 GMT

ஜி20 மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

2023-09-09 09:21 GMT

ரிஷி சுனக் நம்பிக்கை

“15 ஆண்டுகளுக்கு முன்பு, நிதி நெருக்கடியில் இருந்து உலக வளர்ச்சியை மீட்டெடுக்க ஜி20 தலைவர்கள் முதன்முறையாக ஒன்று சேர்ந்தனர். அதன்பின்னர், பல்வேறு சவால்கள் நிறைந்த இந்த சமயத்தில் நாம் சந்தித்திருக்கிறோம். இந்த ஜி20 மாநாட்டை உலகமே எதிர்நோக்குகிறது. அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவால்களை எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்” என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

2023-09-09 09:18 GMT

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் துணை அதிபர் நாடியா, பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கூடுதல் ஆற்றல் தேவை என கூறியுள்ளார்.

2023-09-09 08:50 GMT

பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் டெல்லி விமான நிலையம் வந்தடைந்ததும், நிருபர்கள் அவரை சூழ்ந்து கேள்வி எழுப்பினர். அப்போது, காரில் ஏறி புறப்பட்டு செல்லும் முன் அவர் கூறும்போது, ஜி-20 உச்சி மாநாட்டு இரவு விருந்துக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்று அதில் கலந்து கொள்ள நான் வந்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்