யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி - பத்திரமாக மீட்ட டெல்லி காவல்துறை

யமுனை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமியை டெல்லி போலீசார் பத்திரமாக மீட்டனர்.;

Update: 2025-01-05 12:24 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள ரூப்நகர் காவல் நிலையத்திற்கு வந்த அழைப்பில், ஒரு பெண் தனது 15 வயது மகளை காணவில்லை என்று புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரியவந்தது.

மேலும் சிறுமியின் அறையில் இருந்து ஒரு தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ஏ.சி.பி. வினிதா தியாகி தலைமையில், போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையை தொடங்கினர். நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்த தேடுதலின்போது சிறுமி யமுனை ஆற்றில் குதித்தது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த ஒரு காவலர் மற்றும் பிரிஜேஷ் குமார் என்ற நபர் ஆகியோர் ஆற்றில் குதித்து சிறுமியை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த சிறுமிக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கி, டெல்லி போலீசார் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 


Tags:    

மேலும் செய்திகள்