எனது மன்னிப்பை அரசியலாக்குபவர்கள் அமைதியை விரும்பாதவர்கள் - மணிப்பூர் முதல்-மந்திரி குற்றச்சாட்டு

எனது வேதனையையும், துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நான் பேசி இருந்தேன் என்று மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங் கூறினார்.;

Update: 2025-01-03 18:27 GMT

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் 20 மாதங்களுக்கும் மேலாக மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங், கலவரம் தொடர்பாக மாநில மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார். மேலும் இந்த ஆண்டு மாநிலத்தில் அமைதி திரும்பும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில மணிப்பூரில் அமைதியை விரும்பாதவர்கள் தனது மன்னிப்பை அரசியலாக்குவதாக பைரன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக நான் மன்னிப்பு கோரியதை அரசியலாக்குபவர்கள், மாநிலம் அமைதியின்றி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே. அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு எந்த கொள்கையும் இல்லை. எனது வேதனையையும், துயரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நான் பேசி இருந்தேன். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் ஆகியோரிடமே நான் மன்னிப்பு கோரினேன். பயங்கரவாதிகளிடம் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் மன்னிப்பு கோரியது அப்பாவி மக்களிடமே" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்