நிலப்பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணை மடக்கி உல்லாசம்: டிஎஸ்பி கைது
பெண்ணுடன், டிஎஸ்பி ராமசந்திரப்பா ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவா் ராமசந்திரப்பா (வயது 50). இவர், மதுகிரி போலீஸ் நிலையத்தில் வைத்து ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண்ணை தன்னுடைய அறையில் இருந்து மற்றொரு அறைக்கு ராமசந்திரப்பா அழைத்து செல்கிறார்.
அங்கு வைத்து தான் பெண்ணுடன், அவர் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டதும், அந்த வீடியோ வைரலாகி வருவதும் தெரியவந்தது. மேலும் அந்த பெண் துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர் ஆவார். நிலப்பிரச்சினை தொடர்பாக மதுகிரி போலீசில் புகார் அளிக்க அந்த பெண் வந்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட பழக்கத்தால் அந்த பெண்ணை தனது வலையில் வீழ்த்திய ராமசந்திரப்பா போலீஸ் நிலையத்தில் வைத்தே அவருடன் காமகளியாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பெண் தரப்பில் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் பெண்ணுடன், ராமசந்திரப்பா ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் வைத்து பெண்ணுடன் நெருக்கமாக இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) ராமசந்திரப்பா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மதுகிரி போலீசார் பலாத்கார வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.