ஓடும் ஆட்டோவில் இருந்து விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

ஓடும் ஆட்டோவில் இருந்து விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தாள்.;

Update: 2025-01-03 14:38 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே இலவும் தடத்தில் என்ற பகுதியை சேர்ந்தவர் சுல்பர் நிஜாஸ் (வயது 34). இவர் நெடுங்கண்டம் நகரில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து தலை சுற்றியதால், ஆஸ்பத்திரி செல்வதற்காக ஆட்டோவில் சென்றார்.

அப்போது சுல்பர் நிஜாஸ் வாந்தி எடுப்பதற்காக, ஆட்டோவில் இருந்து தலையை வெளியே நீட்டிய போது, திடீரென அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நெடுங்கண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி சுல்பர் நிஜாஸ் உயிரிழந்தாள்.

இதுகுறித்து நெடுங்கண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்