டெல்லி, உ.பி. இடையே நமோ பாரத் ரெயில் சேவை; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
டெல்லி, உ.பி. இடையேயான நமோ பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.;
டெல்லி,
தலைநகர் டெல்லியின் இருந்து உத்தரபிரதேசத்திற்கு நமோ பாரத் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லியின் நியூ அசோக் நகரில் இருந்து உத்தரபிரதேசத்தின் ஷஹிபாபாத் நகருக்கு இந்த ரெயில் இயக்கப்படுகிறது.
நமோ பாரத் ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அந்த ரெயிலில் ஏறி பயணம் செய்தார். இந்த பயணத்தின்போது மாணவ- மாணவிகள், பொதுமக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.