குஜராத்: கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விபத்து - 3 பேர் பலி

போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது.;

Update: 2025-01-05 10:01 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலம் போர்பந்தரில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சிக்கி கடலோர காவல்படையை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

போர்பந்தரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஏ.எல்.ஹெச். துருவ் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து போர்பந்தர் போலீஸ் சூப்பிரெண்டு பகீரத்சிங் ஜடேஜா கூறுகையில், இன்று மதியம் 12:10 மணியளவில் போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலோர காவல்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்