நேபாளத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

நேபாளத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2023-02-22 12:27 GMT

காத்மாண்டு,

நேபாளத்தின் பஜூரா மாவட்டத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.45 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. நேபாளத்தின் ஜும்லாவில் இருந்து 69 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் பதிவானதாக நேபாளத்தின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் சேதம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

வட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகரான புதுடெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள கட்டிடங்கள் சிறிது குலுங்கின. முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்