மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்பு...!

மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்றுக் கொண்டார்.

Update: 2022-11-23 06:09 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கவர்னராக மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில் புதிய கவர்னர் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த போஸை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 17-ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மாநில அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பிமன் பானர்ஜி கலந்து கொண்டனர். கேரளாவைச் சேர்ந்த சி.வி.ஆனந்த போஸ் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்