மேடையில் வைத்து கோழியை உயிருடன் கடித்துக்கொன்ற நடன கலைஞர்
மேடையில் வைத்து கோழியை உயிருடன் கடித்துக்கொன்ற நடன கலைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞர் நிகழ்ச்சி மேடையில் வைத்து கோழியை உயிருடன் கடித்துக்கொன்றார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த விலங்குகள் நல அமைப்பான பீட்டா, கோழியை கடித்துக்கொன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் நடன கலைஞர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.