மராட்டியத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... ஒரே நாளில் 1,152 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Update: 2023-04-14 15:44 GMT

கோப்புப்படம் 

மும்பை,

இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரவல் உயர்ந்து வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் 1,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 4 பேர் தொற்றால் உயிரிழந்தனர். 5,928 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மராட்டியத்தில் 7 மாத காலத்துக்குப் பிறகு கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்