அரசு வேலை கிடைத்ததும் ஆசிரியர் கடத்தல்: மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தொழில் அதிபர்

பீகார் மாநிலத்தில் அரசு வேலை கிடைத்த இளைஞரை 24 மணி நேரத்தில் கடத்தி துப்பாக்கி முனையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் செங்கல் சூளை அதிபர். இது குறித்த விவரங்களை பார்ப்போம்.

Update: 2023-12-01 11:47 GMT

பாட்னா,

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டதைச் சேர்ந்தவர் கௌதம் குமார். இவர் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி ஆசிரியாக பணியில் சேர்ந்தார். இவருக்கு படேபூரின் ரெபுராவில் உள்ள உத்கிராமித் மத்திய வித்யாலயா பள்ளியில் பணி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கௌதம் குமாருக்கு அரசு வேலை கிடைத்த 24 மணி நேரத்தில், பள்ளிக்கு வந்த நான்கு பேர்   அவரை வலுக்கட்டாயமாக கடத்தி  சென்றுள்ளனர். செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவரின் ஆட்கள் தான் கௌதம் குமாரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது தெரியவந்தது.

 ராஜேஷ் ராய் துப்பாக்கி முனையில் வைத்து, தனது மகள் சாந்தினிக்கு தாலி கட்டுமாறு ஆசிரியர் கௌதம் குமாரை கட்டாயப்படுத்தி உள்ளார். அவரும் பயந்து போய் தாலி கட்டினார். இந்த சம்பவம் குறித்து பீகார் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பீகாரில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் தடவை இல்லை. நல்ல வேலையில் உள்ளவர்கள், அரசு வேலையில் உள்ளவர்கள்தான் இப்படி கடத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். பீகாரில் 'பகத்வா விவா' (மணமகன் கடத்தல் ) என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. அண்மையில் பீகாரின் பெகுசரையில். கால்நடை மருத்துவரை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள் பீகாரில் அடிக்கடி நடந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்