அசாமில் கனமழை, வெள்ளம்: 6 லட்சம் மக்கள் பாதிப்பு

வெள்ளப்பெருக்கு காரணமாக 19 மாவட்டங்களில் 6.44 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-07-01 18:26 GMT

கவுகாத்தி,

அசாமில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து பிரம்மபுத்ரா மற்றும் அதன் கிளை நதிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதுதவிர, திகவ், ஜியா-பராலி, பேகி, குஷியாரா உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள நீர் அபாய அளவை கடந்து ஓடுகிறது.

கனமழையால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 19 மாவட்டங்களில் 6.44 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறனர். இந்த ஆண்டு வெள்ளம், புயல் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஐ எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரம்மபுத்திரா (தேஜ்பூர்), சுபன்சிரி (படாதிகாட்), டிகோவ் (சிவசாகர்), திசாங் (நங்லாமுரகாட்), புர்ஹிதிஹிங் ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கின்றன.

அண்டை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அசாமின் வெள்ள நிலைமை மோசமாக மாறியுள்ளதாக கூறிய அம்மாநில முதல் மந்திரி, பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்ததாக தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்