ஆலு பரோட்டா முதல் சில்லி சிக்கன் வரை.. ஏர் இந்தியாவின் புதிய உணவு மெனுவால் பயணிகள் மகிழ்ச்சி..!!

மீன் குழம்பு, சிக்கன் செட்டிநாடு, மலபார் சிக்கன் போன்ற உணவு வகைகளை ஏர் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

Update: 2022-10-03 12:15 GMT

Image Courtesy: PTI/ AFP 

புதுடெல்லி,

ஏர் இந்தியா தனது உள்நாட்டு பயணிகளுக்காக பிரத்யேகமான உணவு மெனுவை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கான இந்த புதிய உணவு மெனு நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய உணவு மெனுவில் பிசினஸ் வகுப்பு உள்நாட்டு பயணிகளுக்கு ஆலு பரோட்டா, மெது வடை மற்றும் பொடி இட்லி ஆகியவை காலை உணவாக வழங்கப்படும். மதிய உணவாக மீன் குழம்பு, சிக்கன் செட்டிநாடு, உருளைக்கிழங்கு பொடிமாஸ் உடன் கூடிய சாப்பாடு வழங்கப்படும்.

இதை தவிர சர்க்கரை இல்லாத டார்க் சாக்லேட் ஓட்மீல் மஃபின், சீஸ் மற்றும் ட்ரபிள் ஆயில் துருவல் முட்டை, கடுகு கிரீம் தடவப்பட்ட சிக்கன் சாசேஜ் போன்ற உணவு வகைகளும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கான உணவு மெனுவில் இடம்பெற்றுள்ளன.

அதே போல் எகானமி வகுப்பு வாடிக்கையாளர்களுக்கு சீஸ் காளான் ஆம்லெட், ட்ரை ஜீரா ஆலு குடைமிளகாய், பூண்டு தோசை மற்றும் சோளம் தோசை ஆகியவை காலை உணவாக வழங்கப்பட இருக்கிறது.

அதைத் தொடர்ந்து வெஜிடபிள் பிரியாணி, மலபார் சிக்கன் கறி, வெஜிடபிள் பொரியல், வெஜிடபிள் ப்ரைடு நூடுல்ஸ், சில்லி சிக்கன், மற்றும் ப்ளூபெர்ரி வெண்ணிலா பேஸ்ட்ரி, போன்றவை மதிய உணவாக கிடைக்கும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விமான பயணிகளுக்கு புதிய உணவு மெனுவை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தி இருப்பது பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்