ஒளிவட்டப் பாதையை நிறைவு செய்தது ஆதித்யா எல்-1 விண்கலம்

தற்போது 2-வது சுற்று பாதையில் வெற்றிகரமாக பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-02 20:30 GMT

ஸ்ரீஹரிகோட்டா, 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதல்முதலாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 விண்கலத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது.

சூரியன்-பூமி இடையே 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயிண்ட் எல்-1 நிலை நிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே சூரியனை நோக்கி பல்வேறு ஆய்வுகளை ஆதித்யா எல்-1 மேற்கொண்டது. இந்த நிலையில் எல்-1 புள்ளியைச் சுற்றி தனது முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை ஆதித்யா எல்- 1 விண்கலம் நேற்று நிறைவு செய்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, "ஒளிவட்ட சுற்றுப்பாதையில் ஆதித்யா எல்-1 விண்கலம் எல்-1 புள்ளியைச் சுற்றி வந்து ஒரு புரட்சியை முடிக்க 178 நாட்கள் ஆகும். அந்த வகையில் முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையில் கடந்த ஜனவரி 6-ந்தேதி அன்று செருகப்பட்டது. இந்த சுற்றுப்பாதையை பராமரிக்க ஆதித்யா-எல்1 முறையே பிப்ரவரி 22 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் 2 முக்கியமான பரிசோதனையை மேற்கொண்டது. 3-வது பரிசோதனையை நேற்று முடித்து ஒளிவட்ட பாதையும் நிறைவு செய்தது. தற்போது 2-வது சுற்று பாதையில் வெற்றிகரமாக பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்