2 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஏசியில்லா பெட்டிகள் உற்பத்தி: இந்திய ரெயில்வே

ரெயில்வே வாரிய கேன்டீனுக்கு மத்திய ரெயில்வே துறை இணை மந்திரி ரவ்னீத் சிங் பிட்டு நேற்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டார்.

Update: 2024-07-04 20:07 GMT

புதுடெல்லி,

நாட்டில் கோடிக்கணக்கானோர் நாள்தோறும் பயன்படுத்த கூடிய மிக பெரிய துறையாக இந்தியன் ரெயில்வே உள்ளது. இந்நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் ஏசியில்லா பெட்டிகள் உற்பத்தி செய்ய இந்தியன் ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, 2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளில் சாதனை அளவாக 5,300 பொது பெட்டிகளுடன் 10 ஆயிரம் பெட்டிகள் தயார் செய்யப்படும் என தெரிவித்தனர்.

2024-2025 நிதியாண்டில், அம்ரித் பாரத் பொது பெட்டிகள் உள்பட 2,605 பொது பெட்டிகள், அம்ரித் பாரத் தூங்கும் வசதிகள் கொண்ட பெட்டிகள் உள்பட 1,470 ஏசியில்லா தூங்கும் வசதிகள் கொண்ட பெட்டிகள், அம்ரித் பாரத் எஸ்.எல்.ஆர். பெட்டிகள் உள்பட 323 எஸ்.எல்.ஆர். பெட்டிகள், 32 அதிக திறன் வாய்ந்த பார்சல் வேன் மற்றும் 55 பேன்ட்ரி கார்கள் ஆகியவற்றை தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

2025-26 நிதியாண்டில், அம்ரித் பாரத் பொது பெட்டிகள் உள்பட 2,710 பொது பெட்டிகள், அம்ரித் பாரத் தூங்கும் வசதிகள் கொண்ட பெட்டிகள் உள்பட 1,910 ஏசியில்லா தூங்கும் வசதிகள் கொண்ட பெட்டிகள், அம்ரித் பாரத் எஸ்.எல்.ஆர். பெட்டிகள் உள்பட 514 எஸ்.எல்.ஆர். பெட்டிகள், 200 அதிக திறன் வாய்ந்த பார்சல் வேன் மற்றும் 110 பேன்ட்ரி கார்கள் ஆகியவற்றை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், மத்திய ரெயில்வே துறை இணை மந்திரி ரவ்னீத் சிங் பிட்டு, ரெயில்வே வாரிய கேன்டீனுக்கு நேற்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டார். உயர்ந்த தரம் வாய்ந்த உணவை வழங்க வேண்டும் என்று அப்போது அவர் அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்