ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைப்பு

ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.;

Update:2024-11-22 20:06 IST

புதுடெல்லி,

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது வேட்புமனுவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொத்து விவரங்களை தவறாக தாக்கல் செய்ததாக மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் மிலானி மேல்முறையீடு செய்தார்.

அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரத்தில் மனுதாரர் விண்ணப்பத்துடன் முழு விவரம் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், எனவே அனைத்து விவரங்களையும் இணைத்து மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்