குஜராத் சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ளது.

Update: 2022-08-02 15:28 GMT

புதுடெல்லி,

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பத்து பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டது.

ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தியோகர் தொகுதியில் பீமாபாய் சவுத்ரியும், சோம்நாத் தொகுதியில் ஜக்மல் வாலாவும், சோட்டா உதய்பூரில் அர்ஜுன் ரத்வாவும் போட்டியிடுகின்றனர்.

நேற்று ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் சென்றிருந்த நிலையில், குஜராத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றால் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இன்னும் தேர்தலுக்கு பல நாட்கள் உள்ள நிலையில், இப்போதே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து, பஞ்சாபில் காங்கிரசை தோற்கடித்து வெற்றி பெற்றதை போல, குஜராத்திலும் ஆளுங்கட்சியான பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற ஆம் ஆத்மி தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்