7-வது வந்தே பாரத் ரெயில் சேவை - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நாட்டின் 7-வது வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

Update: 2022-12-30 00:47 GMT

கொல்கத்தா,

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டு ரெயில் நிலையங்களுக்கிடையில் 550 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை 8 மணி நேரத்திற்கும் மேலான நேரத்தில் கடக்கும் தற்போதைய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை விட இந்த ரயில் வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரெயில் ஒட்டுமொத்தமாக நாட்டின் 7-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகும், மேலும் இது கிழக்கு இந்தியாவில் முதல் முறையாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலாகும்.

அதே போல் கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். மேலும் ரெயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 திட்டப்பணிகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் இன்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்