“ஊரடங்கை அமல்படுத்தி விட்டு கடையை திறக்க சொல்வதா?” - மத்திய அரசு மீது மம்தா பாய்ச்சல்

ஊரடங்கை அமல்படுத்தி விட்டு கடையை திறக்க சொல்வதா என்று மத்திய அரசை, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Update: 2020-04-27 18:45 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

பிரதமர் மோடி நடத்திய காணொலி காட்சி ஆலோசனையில், நிறைய முதல்-மந்திரிகள் பேச அனுமதிக்கப்படவில்லை. என்னை பேச அனுமதித்து இருந்தால், மத்திய குழுக்களை அனுப்பியது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருப்பேன்.

ஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசு முரண்பாடாக செயல்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம், கடைகளை திறக்க சொல்கிறது? பிறகு எப்படி ஊரடங்கை அமல்படுத்த முடியும்? இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்