விவசாயிகளை பாராட்ட திருக்குறளை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிற விவசாயிகளை பாராட்டி பேசினார்.

Update: 2020-01-31 17:50 GMT
புதுடெல்லி, 

நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிற விவசாயிகளை பாராட்டி பேசினார். இதையொட்டி அவர் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

அந்த குறள்–

‘‘உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து’’.

இந்த குறளுக்கு பொருள், ‘‘உழவுத்தொழில் செய்யாமல், பிற தொழில்களை செய்வாரைத் தாங்குவதால் உழுகின்றவர் உலகத்தார் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்’’ என்பதாகும்.

தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது, ‘‘நமது நாடு விவசாயிகளுக்கு கடன்பட்டுள்ளது. அவர்கள்தான் நமக்கு உணவு வழங்குகிறார்கள். அவர்களின் கடின உழைப்பால்தான் உணவு தானிய உற்பத்தியில் நாம் சுய சார்பு உடையவர்களாக இருக்கிறோம். விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்