கும்பமேளாவில் 5000-க்கும் மேற்பட்டோர் ‘துறவறம்’ ஏற்க பதிவு

உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுவரும் கும்பமேளாவில் துறவறம் ஏற்க 5000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

Update: 2019-01-21 10:38 GMT
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகர் என்ற பெயரால் தற்போது அழைக்கப்படுகிற அலகாபாத்தில், கடந்த 15-ந் தேதி கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. இந்த கும்பமேளாவுக்காக உத்தரபிரதேச மாநிலத்தை ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசு ரூ.4 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 

கும்பமேளா நடைபெறும் இடத்தின் பரப்பளவு முன்பு 1,600 ஹெக்டேராக இருந்தது. தற்போது அது இரு மடங்காக (3 ஆயிரத்து 200 ஹெக்டேர்) அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கும்பமேளாவுக்கு குவிகிற கோடிக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 4 ஆயிரம் கூடாரங்களுடன் ஒரு சிறிய நகரமே உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய சாலைகள், பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கும்பமேளாவின்போது மொத்தம் 12 கோடி மக்கள் வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் 4-ந் தேதிதான் கும்பமேளா நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் கும்பமேளாவில் துறவறம் ஏற்க 5000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் துறவறம் ஏற்கும் நிகழ்ச்சி கங்கை கரையில், வசந்த பஞ்சமி நாளான பிப்ரவரி 10-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. 

மேலும் செய்திகள்