டெல்லியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 20 பசுமாடுகள் சாவு

அரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டம் கல்கா நகரில் இருந்து டெல்லியின் வடமேற்கு பகுதியில் நரேலா நகருக்கு கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலை சென்றுகொண்டிருந்தது.

Update: 2018-08-09 21:56 GMT

டெல்லி,

டெல்லியின் ஹோலிம்பி காலன் மற்றும் நரேலா ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரெயில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது அங்குள்ள தண்டவாளத்தை பசுமாடுகள் கூட்டமாக கடந்து செல்ல முயன்றன.

இதைப்பார்த்ததும் ரெயிலின் ஓட்டுநர் ‘எமர்ஜென்சி பிரேக்’கை பயன்படுத்தினார். ஆனாலும் ரெயில் அதிகவேகத்தில் சென்றதால் நிற்காமல் மாடுகளின் மீது மோதிவிட்டு சென்றது.

இதில் 20 மாடுகள் பரிதாபமாக செத்தன. ரெயில் தண்டவாளத்தில் சிறிய அளவில் சேதாரங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மாடுகளின் உடலை அப்புறப்படுத்திவிட்டு, தண்டவாளத்தை சரி செய்தனர். இதையடுத்து அங்கு ரெயில் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்