சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள்-நிதின் கட்காரி தகவல்

18-வயது முதல் 35 வயது வயதுடையவர்கள் 65 சதவீதம் பேர் சாலை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். #NitinGadkari

Update: 2018-08-09 12:24 GMT
புதுடெல்லி,

மக்களவையில் இது தொடர்பாக பேசிய  மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி,

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர் 18-வயது முதல் 35 வயது வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

அவற்றை சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மது குடித்தும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை ஓட்டுவதால் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன. 

இவற்றை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்