3 வயது குழந்தை அழுததால் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட இந்திய குடும்பம்

3 வயது குழந்தை அழுததால் பிரிட்டிஷ் ஏர் வேஸ் விமானத்தில் இருந்து இந்திய குடும்பத்தினர் இறக்கி விடப்பட்டனர்.

Update: 2018-08-09 10:21 GMT
புதுடெல்லி

இந்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர்  பிரிட்டிஷ் ஏர்வேஸ் "இனவாத பாகுபாடு" மற்றும் "முரட்டுத்தனமான  நடந்து கொண்டது என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு  கடந்த 3 ந்தேதி கடிதம் எழுதி உள்ளார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைசகத்தில்  ஒரு கூட்டு செயலாளர் நிலை அதிகாரி ஆவார். இந்த சமபவம் ஜூலை 23 ந்தேதி நடைபெற்று உள்ளது

அவருடைய குடும்பத்தாரும்  அவரும் கடந்த மாதம்  பெர்லினில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் செல்ல விமான நிலையம் வந்து உள்ளனர்.
விமானம் புறப்படுவதற்கு சிறுது நேரத்திற்கு முன்  3 வயது மகன் அழுத்து உள்ளான்.  

அவர்களுக்கு பின்னால் அமர்ந்து இருந்த மற்றொரு இந்திய குடும்பம்  குழந்தையின் அழுகையை நிறுத்த அவனுக்கு பிஸ்கட் தருவதாக கூறி சமாதானம் செய்தது.  அவரது மனைவி குழந்தையை சமாதானபடுத்த முற்பட்டார்.  ஆனால் குழந்தை சீட்டுக்கு செல்லுமாறு விமான ஊழியர் மிரட்டி உள்ளார். விமானம் ஓடுபாதை நோக்கி நகரும் போது, விமான ஊழியர் மீண்டும் வந்து கூச்சலிட்டார்,

 நீல் அமைதியாக இல்லாவிட்டால்  உன்னை தூக்கி வெளியே எறிவேன் என கத்தினார்.  ஆனால்  (BA 8495) விமானம் உடனடியாக திரும்பி வந்தது. பாதுகாப்புப் படையினர் அவர்களை போர்டிங்குக்கு அழைத்து சென்றனர். வாடிக்கையாளர் பாதுகாப்பு சேவை மேலாளர் அவர்களை இறக்கிவிட்டதன் காரணங்களை கூற வில்லை.

அடுத்த நாள் பெர்லினில் தங்குவதற்கு  மிக அதிக அளவு பணம் கொடுத்து,  அவர்கள்  சொந்தமாக ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது; "இந்திய குடும்பத்திற்கு  அடுத்த நாள் ஒரு விமான டிக்கெட் வழங்கபட்டது. எனினும் அவர்களுக்கு தங்கும்  வசதியும் செய்து கொடுக்கவில்லை.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு எதிராக ஒரு முழுமையான விசாரணை மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடிதத்தில்  கூறி உள்ளார். 

இது குறித்து  பிரிட்டிஷ் ஏர்வேஸ்  கூறியதாவது:-

நாங்கள் இத்தகைய கூற்றுக்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதுடன் எந்த விதமான பாகுபாட்டையும் பொறுத்துக்கொள்ள முடியாது.   நாங்கள் ஒரு முழு விசாரணையை ஆரம்பித்திருக்கிறோம், வாடிக்கையாளருடன் தொடர்பு கொண்டுள்ளோம். என கூறி உள்ளது.

மேலும் செய்திகள்