“நீங்கள் என்ன பெரிய போலீஸ் அதிகாரியா?” பஸ் கண்டக்டர் மகள் கோபத்தில் ஐபிஎஸ் ஆகினார்!!

இமாச்சல பிரதேசத்தில் பஸ் கண்டக்டரின் மகள் சிறுவயதில் ஏற்பட்ட சம்பவத்தால் தவறை தட்டி கேட்கும் ஐபிஎஸ் ஆக உருவாகி உள்ளார்.

Update: 2018-08-03 18:48 GMT
ஷில்லாங்,

இமாச்சல பிரதேசம் தாதல் கிராமத்தை சேர்ந்தவர் ஷாலினி (வயது 29) 1989-ம் ஆண்டு பிறந்த இவர்.  சிறு வயதில் தனது தாயாருடன் பஸ்சில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது ஷாலினியும், அவரது தாயாரும் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களது இருக்கையின் பின்புறம் ஒரு நபர் கையை வைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஷாலினியின் தயார் கையை எடுங்கள் என்று பல முறை எச்சரித்தார். அதனை பெரிதும் எடுத்துக்கொள்ளாத அந்த நபர் நீங்கள் என்ன பெரிய போலீஸ் அதிகாரியா? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வி தான் ஷாலினியின் மனதில் பசுமரத்தாணி போல்  ஆழமாக பதிந்தது.  

அந்த கணத்தில் இருந்து தவறை தட்டிக்கேட்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக வர வேண்டும் என்று தீர்மானித்தார். அவரது தந்தை கண்டக்டராக பணி புரிந்து வந்தார். மகளின் கனவை நிறைவேற்ற சிறுவயது முதலே தயார் செய்து வந்துள்ளார். விடா முயற்சியுடன் படித்து வந்த ஷாலினி, ஐபிஎஸ் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார்.  தற்போது ஐபிஎஸ் போலீஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்துவிட்டார்.

இது குறித்து  ஷாலினி கூறியதாவது:

நீங்கள் எத்தகைய பின்னணியில் இருந்து வருகிறீர்கள் என்பது முக்கியம் இல்லை. நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதற்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். கனவுகளும் நிறைவேறும் எனக் தெரிவித்துள்ளார்.

ஷாலினி தற்போது இளையதலைமுறைக்கு ஒரு ரோல் மாடலாக மாறியுள்ளார்.

மேலும் செய்திகள்