தாஜ்மஹாலில் பேஷன் ஷோ நடத்த இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் மறுப்பு

தாஜ்மஹாலில் கிறிஸ்டியன் டியோர் பேஷன் ஷோ நடத்த இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் மறுப்பு தெரிவித்து உள்ளது. #TajMahal

Update: 2018-07-11 04:56 GMT
பாரீஸ்

தாஜ்மஹாலில் பேஷன் ஷோ நடத்த பிரஞ்சு பாணியிலான கிறிஸ்டியன் டியோர் வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதற்கு  இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏஎஸ்ஐ) மறுப்பு தெரிவித்து உள்ளது. கலாச்சார நிகழ்ச்சி நடத்த   நினைவுச்சின்னமான தாஜ்மஹால்  சரியான இடம்  இல்லை என்று கூறியுள்ளது.

பாரிசில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்ற  கிறிஸ்டியன் டியோர் அதிகாரிகள் பேஷன் ஷோ நடத்த  அனுமதி கோரி இருந்தனர்.

சில நினைவுச்சின்னங்களில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய ஏஎஸ்ஐ அனுமதிக்கும்  ஆனால் , யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய   தளமான தாஜ்மஹால் அவற்றில் ஒன்று அல்ல என  ஏஎஸ்ஐ அதிகாரிகள் தூதரக அதிகாரிகளிடம்  தெரிவித்து உள்ளனர் .

மேலும் அவர்கள் கூறும் போது சுற்றியுள்ள இடங்களில்  போக்குவரத்து சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என கூறி உள்ளனர்.

1997 இல், இசையமைப்பாளர் யானி, தாஜ்மஹாலில் நிகழ்ச்சி நடத்தினார் . அப்போது சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில்  கட்டுமானம், விளக்கு மற்றும் ஒலியால்  தாஜ்மஹால் பாதிக்கப்படும் என்று வாதிடப்பட்டது.

மேலும் செய்திகள்