தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும் தான் காரணம் - ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி

தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம் - டெல்லியில் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்துள்ளார். #Sterlite

Update: 2018-06-06 11:36 GMT
புதுடெல்லி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். மேலும் 65-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 182 பேரை  கைது செய்து உள்ளனர்.  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டது.  இதனையடுத்து 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி  முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ஆலையில் வாயிலில் அதற்கான ஆணையும் ஒட்டப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தூத்துக்குடியில் ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்; இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருக்கிறோம். தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம். என கூறினார்.

மேலும் செய்திகள்