நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. #RBI

Update: 2018-06-06 09:34 GMT
புதுடெல்லி,

குறுகிய கால கடனுக்கான (ரெபோ விகிதம்) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி, 6 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறுகிய கால கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளதால், வங்களில் வீட்டுகடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வங்கிகளுக்கு ரிவர்ஸ் தரும், ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2018-2019 ஆம் நிதியாண்டில்,  முதல் அரையாண்டில் பணவீக்கம் 4.8 முதல் 4.9 சதவீதமாக இருக்ககூடும் எனவும், இரண்டாவது அரையாண்டில் 4.7 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. ஜிடிபிக்கான திட்டமிடல் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) முதல் அரையாண்டில் 7.5 முதல் 7.6 ஆகவும், இரண்டாவது அரையாண்டில் 7.3 முதல் 7.4 ஆகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்