ஷீனா போரா கொலை வழக்கு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திராணி முகர்ஜி டிஸ்சார்ஜ்

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திராணி முகர்ஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #IndraniMukerjea

Update: 2018-06-02 15:18 GMT
மும்பை,

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாசுக்கு பிறந்ததாக கூறப்படும் ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, நிதி பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்திராணி முகர்ஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது இரண்டாவது கணவர் என்று கூறப்படும் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது மும்பை பைகுல்லா சிறையில் அவர் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் சிறையிலிருக்கும் அவருக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக அவர் மும்பை ஜெஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அங்கு இந்திராணி முகர்ஜிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறியதை தொடர்ந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

மேலும் செய்திகள்