வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்கள் தேவையா?; நடிகர் உபேந்திரா கருத்தால் பரபரப்பு
வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாட்கள் தேவையா? என்ற நடிகர் உபேந்திரா கருத்தால் பரபரப்பு.
பிரபல கன்னட திரைப்பட நடிகரான உபேந்திரா, உத்தம பிரஜாக்கிய கட்சிைய தொடங்கியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் அவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால் அனைவரும் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், மே 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் நேற்று முன்தினம் தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் உபேந்திரா, இந்த டிஜிட்டல் யுகத்தில் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ண 2 நாட்கள் கால அவகாசம் ேதவையா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சிலர் ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளனர். அதே வேளையில் பலரும் நடிகர் உபேந்திராவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உங்கள் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நீங்கள் அந்த படத்தை திரையிட்டு விடுவீர்களா என காட்டமாக கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு மாறி மாறி நெட்டிசன்கள் உபேந்திரா கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்து தங்களது கருத்துகளை பதிவிட்டனர்.