மராட்டியம்: கண்டெய்னர் லாரி மீது வேன் மோதி கோர விபத்து - 12 பேர் பலி

கண்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-10-15 04:28 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்கன்ஞ்நகர் மாவட்டத்தில் உள்ள சம்ருதி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 35 பேர் பயணித்தனர்.

வைஜபூர் பகுதியில் பயணித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்