தண்ணீரின் தரம் - கான்கிரீட் கட்டமைப்புகளுக்கு உரம்
வீடுகளில் உபயோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் டி.டி.எஸ் சுமார் 20 வரை இருக்கலாம். மெட்ரோ விநியோகம் செய்யும் குடிநீரில் சுமார் 50 முதல் 60 வரை டி.டி.எஸ் இருக்கும் வாய்ப்புள்ளது. சமைக்க, துணி துவைக்க பயன்படுத்தப்படும் தண்ணீரில் சுமார் 600 டி.டி.எஸ் வரை அனுமதிக்கப்படலாம்.
கடல் நீரில் சாதாரணமாக 35,000 டிடிஎஸ் வரை தாதுக்கள் கலந்திருக்கலாம். குறிப்பிட்ட சில கடல் பகுதிகளில் 65,000 டிடிஎஸ் வரையில் கூட இருக்கும் என்று அறியப்பட்டுள்ளது.
வீடுகளில் அன்றாட உபயோகம் மற்றும் கட்டுமான பணிகளுக்காகப் பயன்படுத்தும் தண்ணீரில் துத்தநாகம், நைட்ரேட் இரும்பு, காப்பர், சல்பைட் போன்ற பல்வேறு தனிம தாதுக்கள் கலந்திருப்பதை ஆய்வுகளில் கண்டறிந்துள்ளார்கள். இதை டி.டி.எஸ் (total dissolved solids-TDS) என்று குறிப்பிடுவார்கள்.
கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் நீரின் டி.டி.எஸ் அளவு (BIS Standard says that the maximum desirable TDS is 500 mg/L) இந்திய தரக்கட்டுப்பாடு நிலைப்படி அதிகபட்சமாக 600 mg/L வரை அனுமதிக்கப்படுகிறது. கியூரிங் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் தண்ணிரீன் தரம் வரையறை செய்யப்பட்ட அளவுக்குள் இருக்கவேண்டும்.
இல்லாவிட்டால் தண்ணீரானது சிமெண்டுடன் எதிர்வினை புரிந்து கான்கிரீட்டின் தரத்தை வலுவிழக்க செய்யக்கூடும். தண்ணீருக்கான தரப்பரிசோதனைகளை செய்ய விரும்புவோர் அரசு மற்றும் தனியார் ஆய்வுக்கூடங்களை அணுகி பயன் பெறலாம்.