வாஸ்து முறைப்படி படிக்கட்டுகள்
ஒரு வீட்டில் படிக்கட்டுகள் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. வெளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் படிக்கட்டுகள், வெளிப்பகுதியை வீட்டின் உட்பகுதியோடு இணைக்கிறது. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் இரண்டு தளங்களை இணைக்கிறது. இவ்வாறு தொடர்பு பாலங்களாக விளங்கும் படிக்கட்டுகள் வாஸ்துவில் முக்கிய இடம் பெறுகிறது. கட்டிடக்கலை வல்லுனர்களும் கட்டுமான பொறியாளர்களும் வாஸ்து சாஸ்திர நிபுணர்களும் படிக்கட்டுகள் அமையும் இடத்தையும் அவை எத்திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனமாக கருத்தில் கொள்கின்றனர்.
வீட்டில் எப்பொழுதும் நல்ல மங்கலமான நேர்மறையான சக்தி நிறைந்திருக்க வேண்டும் எனும் கோணத்தில் வாஸ்து செயல்படுகிறது. வீட்டின் எல்லா பகுதிகளிலும் சமமான நேர்மறை சக்தி இணக்கமாக விளங்க வேண்டும் என்பதில் வாஸ்து சாஸ்திரம் மிகுந்த அக்கறை காட்டுகிறது. எனவே தான் படிக்கட்டுகள் அமைப்பதில் வாஸ்துவின் பங்கு மிக முக்கியமாகிறது.
வீட்டின் தென்கிழக்கு பகுதியில் படிக்கட்டுகள் அமையும் என்றால் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். தென்மேற்கில் அமைகிறது என்றால் மேற்கை பார்த்தவாறு அமைய வேண்டும். வடமேற்கில் அமைந்தால் வடக்கு திசை பார்த்தவாறு அமைய வேண்டும். வடகிழக்கில் மாடிப்படி அமைவதை தவிர்க்கலாம்.