விருந்தினர் அறை அலங்கரிப்பு


விருந்தினர் அறை அலங்கரிப்பு
x

வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களை தங்க வைக்கும் அறைகளை சுத்தப்படுத்துவதும் அலங்காரப்படுத்துவதும் நாம் அனைவரும் செய்யும் ஒரு தலையாய செயலாகும்.

சிலர் வயதானவர்களையும் நோயுற்றவர்களையும் பார்த்துக் கொள்ள வீட்டிலேயே தங்கி கவனித்துக் கொள்ளும் ஆட்களை ( கேர் டாக்டர்) அமைத்து கொள்வதுண்டு. அவர்கள் தங்குவதற்கும் சில பெரிய வீடுகளில் தனி அறை ஒதுக்கப்படுவது உண்டு.

மேலும் இன்னும் சில இடங்களில் இருவர் மட்டுமே இருக்கிறார்கள் எனில் ஒரு அறையை வேலை பார்க்கவும் சிலருக்கு (பேயிங் கெஸ்ட்) வாடகைக்கு பகிர்ந்து அளிக்கிறார்கள்.

புதுமண தம்பதிகள் தங்கும் அறைகளை அலங்கரிப்பதும் தன் அன்புக்குரியவர்களுக்கு ஆச்சரியத்தை தரும் வகையில் பல வண்ண புதுமையான முறையில் மாற்றி அமைத்து வியப்புக்குள்ளாக்குவதும் அவர்களின் பாராட்டைப் பெறுவதும் மகிழ்ச்சியான ஒன்றாகும்.

குழந்தைகள் தங்கும் அறையினில் மேற்கூறையில் பல அலங்காரங்களை சிலர் நட்சத்திரம் நிலா போன்ற ஸ்டிக்கர்ஸ் உபயோகித்து ஆகாயத்தை பூமியில் வரவழைக்கும் வித்தையை ஏற்படுத்துகிறார்கள். இரவில் அனைத்து விளக்குகளையும் அணைத்து பார்க்கும் பொழுது பிரம்மாண்டமாக குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

கார்ட்டூன் தொலைக்காட்சியில் வரும் பிம்பங்கள் கொண்ட வால்பேப்பர்களையும் இயற்கை காட்சிகளான வால்பேப்பர்களையும் ஒட்டி அவர்களை சந்தோஷப்படுத்தலாம்.

குழந்தைகள் படுக்கை அறையில் மயில், முயல் போன்ற விலங்குகள், டோரா புஜ்ஜி போன்ற பிம்பங்களை கொண்ட விரிப்புகளையும் விரித்தும் அவர்களை வியப்பில் ஆழ்த்தலாம். இது பெரியவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் கூட திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

விருந்தினர்கள் தங்கும் அறைகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் அழகான வண்ணமயமான காற்றோட்ட வசதிகள் கிடைக்கும் வகையில் திரைச்சீலைகளை கொண்டும் அலங்கரிக்கலாம். விருந்தினர்கள் தங்கும் அறையை அழகான வண்ண விளக்குகளை கொண்டும் அலங்கரிக்கலாம். விளக்குகள் கண்களை பாதிக்காத வண்ணம் அமைத்தல் மிகவும் அவசியமாகும்.

விருந்தினர் அறையை அலங்கரிக்கும் போது அலங்காரங்களை நமது தேவைக்கு ஏற்ப அமைக்காமல் வந்து தங்கும் விருந்தினர்களின் வசதிக்கேற்ப அமைத்தல் மிக முக்கியம்.

அறைகள் சிறியதாக இருப்பின் சோபா கம் பெட் போன்ற மல்டி ஃபங்ஷனல் மரச்சாமான்களை கொண்டு சீர்மைப்பது சிறந்ததாகும். விருந்தினர்களின் வசதிகளுக்கு ஏற்ப உடை மாற்றும் பெரிய முழு நீள கண்ணாடிகள் மற்றும் துணிகளை வைக்கும் செல்ஃப் போன்ற வசதிகளை அமைக்க வேண்டும்.

பணம் தந்து தங்குவார்கள் எனில் அவர் களுக்கு வேலை செய்யும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதும் நமது கடமையாகும். வைஃபை கனெக்ஷன், மேசை, நாற்காலி போன்ற வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் அவசியம்.

தூக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று. ஆதலால் விருந்தினர் படுக்கும் அறையில் மெத்தை பஞ்சு போன்ற தலையணை, விரிப்புகள், மெத்தையின் தரம் அனைத்தையும் நாம் கூர்ந்து தரமானவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

விருந்தினர்கள் மற்றும் தங்குபவர்களுக்கு ஏற்ப விளையாட்டு சாதனங்களும் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும். கேரம், செஸ், சீட்டு கட்டுகள் போன்றவைகளை அவர்களுக்கு பொழுதுபோகும் வண்ணம் அமைத்தல் வேண்டும்.

புத்தகப் பிரியர்களாக இருந்தால் சில கதை புத்தகங்கள் நாவல்கள் ஆங்கில புத்தகங்களை அலமாரியில் அடுக்கலாம். குழந்தைகளுக்கான வரையும் மற்றும் படிக்கும் புத்தகங்களையும் வைக்கலாம்.

விருந்தினர்கள் தங்கும் அறைகளில் காற்றோட்ட வசதியை உறுதி செய்ய வேண்டும். பால்கனி வசதி இருக்குமாயின் அதில் அமரும் நாற்காலிகள் மட்டும் டேபிள் வைத்து அவர்களுக்கு அமர்ந்து ஓய்வெடுப்பதற்கும் பேசுவதற்கும் வசதியாக இருப்பது மகிழ்வையும் மனதிருப்தியையும் தருகிறது.

கழிப்பறை குளியலறை மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாகும். கழிப்பறைகளில் தண்ணீர் வசதி சோப் டவல் துண்டு ஷாம்பு டிஷ்யூ பேப்பர்ஸ் பேஸ்ட் குப்பைத்தொட்டி மற்றும் கண்ணாடி போன்ற எல்லா வசதிகளும் இருப்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

வசதியான இடங்களில் சிலர் விருந்தினர் அறையில் உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகளையும் அதற்கான உபகரணங்களையும் வைத்து உள்ளனர்.

விருந்தினர் அறையில் பூச்செடிகளையும் பூக்களை ஜாடிகளில் வைத்தும் அலங்கரிக்கலாம். அதன் நறுமணங்களும் புத்துணர்ச்சி அளிக்கின்றது.

அறையில் துர்நாற்றங்கள் இல்லாத வண்ணம் நறுமண திரவங்களை தெளிக்கலாம். அவர்கள் தங்கும் அறையில் மின்விசிறி மற்றும் குளிர்சாதன பெட்டிகள் அமைத்து தட்பவெட்ப நிலைகளை சமன் செய்யும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

விருந்தினர்கள் வந்து தங்கும் அந்த நாட்கள் அவர்களது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அழகான சுகமான நினைவுகளாக இருக்கும்படி நாம் அறைகளை பராமரிப்பது நமக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.


Next Story