வீட்டின் உபயோகத்திற்கு கிரானைட்ஸ்


வீட்டின் உபயோகத்திற்கு கிரானைட்ஸ்
x

கிரானைட் பழமையான கற்களில் ஒன்று. கிரானைட் பளபளப்பான வலிமையான கற்களாகும். ஆதலால் நீடித்து உழைக்கிறது. பரந்த அளவில் பல வண்ணங்களில் அழகாகவும் மலிவானதாகவும் உள்ளது.

இது தரமான வலுவான தரைகளுக்கு பயன்படுத்தப்படும். கட்டிட அமைப்புகளின் தரை பகுதிக்கு பயன்படுத்தப்படும் கற்களில் இதுவும் ஒன்று. கிரானைட் வீட்டிற்கு நேர்த்தி மற்றும் பிரமாண்டமான அழகையும் தருகிறது.

கிரானைட், வீடு, அலுவலகம், தாழ்வாரம், நீச்சல் குளம் மற்றும் பார்க்கிங்கில் உள்ள பூச்சுக்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிரானைட்டுக்கும் அடிப்படையான நிறத்தன்மை உள்ளது. கருப்பு, வெள்ளை, சிவப்பு, சாம்பல் மற்றும் பழுப்பு நிறங்களை கொண்டதாக உள்ளது. பல்வேறு வகையான தரமான கிரானைட் வகைகள் சந்தைகளில் விற்பனையில் உள்ளது.

கருப்பு கிரானைட்:- உலகம் முழுவதும் இவ்வகை கிரானைட் தரமானதாகவும் வலுவானதாகவும் பயன்பாட்டில் உள்ளது. இது ஜெட் பிளாக் கிரானைட் என்றும் கூறப்படுகிறது. கருப்பு கிரானைட் வீடுகளின் சமையலறை மட்டும் குளியல் அறையில் உள்ள சுவர்கள் மற்றும் தரைகளிலும் டைல்சாக பயன்படுகிறது. இவ்வகை கருப்பு கிரானைட் கனமானதாகவும் தரமானதாகவும் உள்ளது.

கருப்பு கேலக்ஸி கிரானைட்:- உலகின் பிரபலமான கிரானைட்ஸ் வகைகளில் இது இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. இது தங்கம் மற்றும் வெள்ளி நிற புள்ளிகளை கொண்ட கருப்பு நிறத்தில் இருக்கும். இது விளக்குகள் ஒளிரும் போது பளபளப்பாக மிளிரும் தன்மை கொண்டதாக உள்ளது.

இவ்வகைகளும் சுவர்கள், சமையலறை கவுண்டர் டாப்ஸ், நினைவு ஸ்தலங்கள் ஆகிய இடங்களில் பயன்படுகிறது. அல்ஜீரியா, லிபியா, மொராக்கோ, இந்தோனேசியா, ஓமன், ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிரபலமாக உள்ளது.

வெள்ளை கிரானைட்:- இது அலாஸ்கன் வெள்ளை கிரானைட் என்று கூறப்படுகிறது. இவ்வகை கிரானைட் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வகை அமெரிக்காவில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் பிரபலமாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது 2 சென்டிமீட்டர் முதல் 3 சென்டிமீட்டர் வரை தடிமன் உள்ளதாக இருக்க வேண்டும்.

அயல்நாடுகளில் சமையல் அறையில் கவுண்டர் டாப்பாக அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இவ்வகை கிரானைட்ஸ்கள் பெரும்பாலும் நினைவகங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் உள்ள இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. அல்ஜீரியா மலேசியா சிங்கப்பூர் சவுதி அரேபியா கத்தார் போன்ற இடங்களில் பிரபலமாகியுள்ளது.

சிவப்பு கிரானைட் :- இவ்வகை கிரானைட் சிவப்பு , அடர் சிவப்பு மற்றும் பிரவுன் கலந்த நிறங்களாக இருக்கும். இது இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் அதிகமாக வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வகை சிவப்பு கிரானைட்ஸ் சமையலறை கவுண்டர் டாப்ஸ் நினைவகங்கள், தரைத்தளங்கள் மற்றும் சுவரில் பதிப்பதற்கும் பயன்படுகிறது . இவைகள் அதிகமாக போலந்து, ஜெர்மனி, அல்போனியா, ரொமானியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா மற்றும் பால்டிக் நாடுகளில் அதிகம் விற்பனையாகிறது.

பழிப்பு நிற கிரானைட்:- இது அதிகமாக தெலுங்கானா பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இதை டான் பிரவுன் கிரானைட் என்றும் அழைக்கிறார்கள். இது பழுப்பு நிறத்தில் அழகாக உள்ளதால் சமையலறை கவுண்டர் டாப், சுவர்களிலும், பாத்திரம் கழுவும் இடங்களிலும் மற்றும் குளியலறை சுவர்கள், தரையிலும் உபயோகப்படுகிறது. இது அமெரிக்கா கனடா ரஷ்யா ஜெர்மனி உஸ்பெகிஸ்தான் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பிரபலமாக உள்ளது.

கிளாசிகோ கிரானைட்:- இது சாம்பல் நிறத்திலும் ஊதா நிறத்திலும் காணப்படுகிறது. இவ்வகைகள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ளது. இது ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் போர்ச்சுக்கல் இந்தோனேசியா மற்றும் ருமேனியா நாடுகளில் அதிக பயன்பாட்டில் உள்ளது. மாடிகளிலும் மாடிகளின் சுவர்களிலும், ஓடுகள் போன்ற அமைப்புகளிலும் இவ்வகைகள் உபயோகப்படுகிறது.

நியூ இம்பீரியல் கிரானைட் :- இவ்வகைகள் இந்தியாவில் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் அதிகமாக வெட்டப்படுகிறது. ஆனால் ராஜஸ்தானில் தான் இதன் தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கிறது. இவை சிறிது முதல் பெரியது வரையிலான அழகிய வண்ண மலர்களை பின்னணியில் உள்ளடங்கியதாக இருக்கும். இவை நினைவகம் மட்டும் நினைவுச் சின்னங்களில் பயன்படுகிறது. குளியலறை சுவர்கள் மற்றும் வெளிப்புற சுவர்களிலும் பயன்படுகிறது. இது ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளின் சந்தைகளில் கிடைக்கிறது. இது பல்வேறு அளவுகளிலும் மற்றும் தடிமன்களில் கிடைக்கிறது.

மூன் ஒயிட் கிரானைட்:- இது காஷ்மீர் வெள்ளை கிரானைட் போன்றிருப்பதால் இதை காஷ்மீர் முத்து கிரானைட் என்று அழைக்கப்படுகிறது. இது வெள்ளை நிறத்தில் முத்து போன்ற மலர்களை பின்னணியாக கொண்டும் மற்றும் பழுப்பு நிறத்திலும் உள்ளது. இது ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் வெட்டப்பட்டு ஹைதராபாத் மற்றும் ஓங்கோலில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அமெரிக்க நாடுகளிலும் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளிலும் அதிகமாக உபயோகத்தில் உள்ளது. பல அளவுகளில் சமையலறை கவுண்டர்டாப்பாக பயன்படுகிறது.

நீலகிரானைட் :- இது கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளை மற்றும் ரோஸ் நிறமாக மாறிக் கொண்டிருக்கும் ஒருவகை நிறம் மாறும் பாறை வகையை சார்ந்தது. இது சில கனிமங்களால் இவ்வாறு நிறமாற்றத்தை அடைகிறது. காஷ்மீர் வெள்ளை கிரானைட் இந்தியாவில் உள்ள பல கிரானைட்களில் பிரபலமானது. இது மதுரை மாநில குவாரியில் வெட்டி எடுக்கப்படுகிறது. பெங்களூர் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள சந்தைகளில் கிடைக்கிறது. சாம்பல் மற்றும் பழுப்பு நிற நிறத்தில் வெள்ளை பின்னணியை கொண்டு அமைந்திருக்கும்.

இது பொதுவாக அனைத்து முக்கிய விமான நிலையங்களில் பயன்படுத்த படுகிறது. இது ஐரோப்பியா அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது ஸ்லாப் மட்டும் தரை ஓடுகளாகவும் பயன்படுகிறது.

இது தவிர பாலைவன பிரவுன், ரோஸி பிங்க் மற்றும் கிரிஸ்டல் மஞ்சள் போன்ற கிரானைட் வகைகளும் உலக சந்தையிலும் மற்றும் உள்நாட்டு சந்தைகளிலும் பிரபலமாக உள்ளது.


Next Story