கட்டுமான மணல் வகைகள்
கட்டுமான பணிகளில் மணல் முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைய காலங்களில் மணல் செம்மண் களிமண் போன்ற பல மண் வகைகள் வீடு கட்டுவதற்கும் மற்றும் பலவிதமான கட்டுமான பணிகளுக்கும் உபயோகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கட்டுமான பணிகளுக்கு ஏற்ப பல வகையான மண் வகைகள் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
ஆற்று மணல்
ஆதிகாலம் முதலே கட்டுமானத்திற்கு முக்கிய பங்கும் முதலிடம் வகிப்பதும் ஆற்று மணல் தான்.. ஆற்று மணல் ஆறுகள் மற்றும் ஆற்று படுகையில் இருந்தும் எடுக்கப்படுகிறது.
வீடு கட்டுவதற்கு முக்கியமாக இந்த ஆற்று மணல் பயன்படுகிறது. தளங்கள் அமைப்பதற்கும் ஆற்று மணல் உபயோகிக்கப்படுகிறது. விரிசல்கள் மற்றும் சில துளைகளை நிரப்புவதற்கும் ஆற்று மணல் பயன்படுத்துகிறது. ஆற்று மணல் தூய்மையானதாகவும் கட்டுமான பணிகளில் உபயோகப்படுத்துவதற்கு எளிதானதாகவும் இருக்கும்.
கான்கிரீட் மணல்;-
இவ்வகை மணல் அடித்தளம் அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அடித்தளம் பலமானதாகவும் உறுதியானதாகவும் இருந்தால்தான் அதன் மேல் பல மாடி கட்டடங்கள் கட்டினாலும் தாங்கும். இவ்வகை கான்கிரீட் மணல் கான்கிரீட் நடைபாதைகள், சாலைகள் அமைக்கும் இடங்களில் பயன்படுகிறது
எம் சாண்ட்
பாறைகளை உடைத்து தயாரிக்கப்படும் மணல் எம்சாண்ட் என்று அழைக்கப்படுகிறது. இது உறுதியானதாக இருப்பதால் சாலைகளை உருவாக்கும் பணிகளில் பெரும்பாலும் உபயோகப்படுகிறது. இவ்வகை மணல்கள் சுத்தமானதாகவும் தரமானதாகவும் தேர்ந்தெடுத்தால் மட்டுமே நீண்ட நாள் உழைக்கும். இவ்வகை மணல்கள் மலிவான விலையில் கிடைக்கிறது. தற்காலங்களில் கட்டுமான பணிகளுக்கும் உபயோகிக்கிறார்கள்.
நிரப்பு மணல்
இவ்வகை மணல்களும் பாறைகள் கிரானைட்ஸ் போன்ற கனிம பொருள்களின் துகள்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் கூழாங்கற்கள் சிறுசிறு செங்கற்கள் களிமண் போன்ற கலவைகள் கலந்து இருக்கும். ஆதலால் இவ்வகை மண் உறுதியானதாக இருக்கும்.
இவ்வகை மணல்கள் கான்கிரீட் போடும் போது உட்புறங்களில் நிரப்புவதற்கு பயன்படுகிறது. தரைகளை சமன்படுத்தும் போதும் இந்த மணல்கள் உபயோகிக்கப்படுகிறது. வடிகால் குழாய்கள் அமைக்கும் இடங்களிலும் இவ்வகை மணல் நிரப்பப்படுகிறது. குதிரை சவாரி பயிற்சி நடக்கும் இடங்களிலும் தளத்தில் இந்த மண் வகைகள் பயனுள்ளதாக உள்ளது.
குழி மணல்
திறந்தவெளியில் பரந்த குழிகளில் இருந்து எடுக்கப்படும் மணலே குழி மணல் என கூறப்படுகிறது. இவ்வகை குழி மணல் வாட்ஸ், மைக்கா போன்ற தாதுக்கள் கலந்து இருக்கும். இவ்வகை மணல்கள் குழிகளை நிரப்புவதற்கும், கான்கிரீட், மற்றும் தளங்களை சமன்படுத்தவும் பயன்படுகிறது.
பயன்பாட்டு மணல்
இவ்வகை மணல்களும் ஏறத்தாழ நிரப்பு மணல்களை போன்றவையே. இந்த மணல் வகைகள் மிகப்பெரிய வெற்றிடங்களை நிரப்பவும் கரடு முரடான பாதைகளை சமன்படுத்தவும் பயன்படுகிறது. இந்த வகை மணல்கள் சாலைகள் மற்றும் பாதைகள் அமைப்பதற்கு பயன்படுகிறது.
வெள்ளை மணல்
இவ்வகை மணல்கள் பல வகைகளில் கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. இந்த மணல் உபயோகித்து உருவாக்கும் அமைப்புகள் பலரையும் கவரும் வண்ணம் அழகான தோற்றத்தை தருகிறது. வீட்டின் தோட்டத்தை அழகு படுத்தவும் பயன்படுகிறது.
ஒவ்வொரு வகை மணலும் ஒவ்வொரு விதத்தில் கட்டுமான பணிகளுக்கு உதவுகிறது. எந்த மணலை எந்த கட்டிடத்திற்கு உபயோகிக்க வேண்டும் என்பதை கட்டிட பொறியாளர் இத்துறை தேர்ந்த வல்லுனர்கள் ஆலோசனையோடு தரமான முறையில் உபயோகித்தால் கட்டிடத்தின் தரமும் உயர்வாக இருக்கும்.