வாரம் ஒரு திருமந்திரம்

சிவபெருமானின் பெருமைகளை, தன்னுடைய பாடல்கள் மூலமாக வெளிப்படுத்தியவர் திருமூலர். இவர் இயற்றிய நூல் ‘திருமந்திரம்’ என்று அழைக்கப்படுகிறது.
இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
ஆரும் உரைசெய்யலாம் அஞ்சு எழுத்தாலே
ஆரும் அறியாத ஆனந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலும் மதி அதில்
ஊனும் உயிரும் உணர்வதுமாமே.
விளக்கம்:-
ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய'த்தை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதை ஓதி, மகிழ்ச்சியான உருவத்தை அடையலாம். வான் உலகமும், சந்திரனும், சூரியனும், நம் உடலும், உயிரும், உணர்வுமாக எங்கும் பரந்து விரிந்து நிற்பது அந்த ஐந்தெழுத்து மந்திரமே.
Related Tags :
Next Story