வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.

திருமூலர் பாடிய திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

மனத்திடை நின்ற மதிவாள் உருவி

இனத்திடை நீக்கி இரண்டு அற ஈர்த்துப்

புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்

தவத்திடை யாறொளி தன்னொளி யாமே.

விளக்கம்:- உள்ளம் என்னும் உறையில் இருக்கும் ஞானமாகி வாளை உருவி, மனிதனின் பாவ- புண்ணியங்களுக்கு காரணமான ஐந்து குணங்களால் இணைந்துள்ள ஆசை என்னும் கயிறை இரண்டு துண்டுகளாகும்படி அறிந்து, தன்னையும் இறைவனையும் வேறு வேறு என்று எண்ணாமல், ஐந்து குணங்களால் நம் உடலையும், மனதையும் ஆட்சி செய்யாத வகையில் நீக்கினால், சிவ ஒளியே, தன்னொளியாக தென்படும்.


Next Story