வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு


வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தஞ்சாவூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமை வார வழிபாடு நடைபெற்றது. இதில், வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு வடமாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story