திருப்பணி தொடக்க விழா

கண்டியூர் சிவன் கோவிலில் திருப்பணி தொடக்க விழா நடந்தது.
தஞ்சாவூர்
திருவையாறு,
திருவையாறு அருகே உள்ள கண்டியூரில் பிரசித்தி பெற்ற பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதன் அடிப்படையில் திருப்பணிக்காக நேற்று கோவிலில் பாலாலய ஹோமம் நடந்தது. பின்னர் கடம் புறப்பாடாகி நான்கு பிரகாரங்களில் வலம் வந்து வரையப்பட்டிருக்கும் சாமிகளின் ஓவிய படத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ., திருக்கோவில் செயல் அலுவலர் பிருந்தாதேவி மற்றும் சிவசங்கரி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் குணசுந்தரி, கோவிலின் எழுத்தர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story