ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 20ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசனை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, இன்று (15-ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேலும் வரும் 20-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story