வாரம் ஒரு திருமந்திரம்
திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
திருமூலரால் இயற்றப்பட்ட திருமந்திர நூல், சிவபெருமானின் தனித்தன்மைகளையும், சிறப்புகளையும் போற்றிப்புகழ்கிறது. அந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
சிவனே சிவஞானி ஆதலால் சுத்த
சிவனே என அடி சேரவல்லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமானது இன்றிப் பரலோகமாமே.
விளக்கம்:-
சிவபெருமானே குருவாகவும், சிவஞானியாகவும் வந்து அருள் செய்பவர். அவ்வாறு வரும்போது அந்த குருவை, சிவனே என உணர்ந்து வணங்குபவர்களுக்கு, மாய காரியங்களான உலகத் தோற்றங்கள் மறைந்து, என்றும் நிலையான முக்திப்பேறு கிடைக்கும். பாவங்கள் நீங்கும். இறைவன் திருவடி சேர்ந்து வாழும் வாழ்வு கிடைக்கப்பெறும்.
Related Tags :
Next Story