கண்ணீர் கடலில் தமிழகம்... பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்...லைவ் அப்டேட்ஸ்


தினத்தந்தி 28 Dec 2023 4:44 AM GMT (Updated: 28 Dec 2023 6:40 PM GMT)

விஜயகாந்தின் இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Live Updates

  • 28 Dec 2023 6:22 PM GMT

    தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல்

    இதுதொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில், “திரை உலகில் கடுமையான உழைப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த்..! அதேபோல் அரசியலிலும் ஈடுபட்டு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றவர்..!! விஜயகாந்த் வில்லனாக நடித்த காலத்திலிருந்தே நிறைய படங்களில் அவருடன் நான் நடித்திருக்கிறேன்..!!

    தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் அவர்.!! சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அடித்தட்டு மக்களின் மனங்களை கவர்ந்தவர் ...!! அப்படிப்பட்ட விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது எல்லோருக்குமே அது வேதனையாக இருந்தது..!!

    அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் மிகவும் துடித்து போனார்கள்..!! விஜயகாந்த் இந்த உலகில் இனி இல்லை என்பதை யாருடைய மனமும் ஏற்றுக் கொள்ளாது...!! அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்..!! இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் முதல்-அமைசர் மு க ஸ்டாலின் அவர்கள் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகளை நடத்த முன் வந்தது விஜயகாந்த் அவர்களுக்கு அளித்த உண்மையான கவுரவம் என்று நான் கருதுகிறேன்...!! ஏழை எளிய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...!! you have done your best Viji, RIP” என்று அதில் ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ளார். 

  • 28 Dec 2023 5:54 PM GMT

    மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி

    மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து நாளை காலை 6 மணிக்கு விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

    அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையின் மீது கைகளை வைத்தபடி கண்ணீர் மல்க விஜய் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.

  • விஜயகாந்த் உடலுக்கு நாளை அஞ்சலி செலுத்துகிறார் ரஜினிகாந்த்
    28 Dec 2023 4:02 PM GMT

    விஜயகாந்த் உடலுக்கு நாளை அஞ்சலி செலுத்துகிறார் ரஜினிகாந்த்

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நாளை அஞ்சலி செலுத்துகிறார் நடிகர் ரஜினிகாந்த். நாகர்கோவிலில் படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த், நாளை காலை 7.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை புறப்படுகிறார்.

  • 28 Dec 2023 3:03 PM GMT

    தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

  • பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்
    28 Dec 2023 2:30 PM GMT

    பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்

    மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது. நாளை அதிகாலை 4 மணியளவில் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

  • 28 Dec 2023 2:14 PM GMT

    கேப்டன்' விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய் சேதுபதி.

  • 28 Dec 2023 2:11 PM GMT

    கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு 'இசைஞானி’ இளையராஜா அஞ்சலி செலுத்தினார்.

  • விஜயகாந்த் மறைவு - நடிகர் சூர்யா இரங்கல்
    28 Dec 2023 2:09 PM GMT

    விஜயகாந்த் மறைவு - நடிகர் சூர்யா இரங்கல்

    அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை, யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக்கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் என நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

  • 28 Dec 2023 1:01 PM GMT

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய்சேதுபதி,நடிகர் அர்ஜூன்,நடிகர் ஆனந்த்ராஜ் ஆகியோர் அஞ்ச்சலி செலுத்தினர்.

  • 28 Dec 2023 12:31 PM GMT

    மறைந்த விஜயகாந்த் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.


Next Story