மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில்... ... கண்ணீர் கடலில் தமிழகம்... பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்...லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-12-28 17:54:57.0
t-max-icont-min-icon

மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி

மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து நாளை காலை 6 மணிக்கு விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையின் மீது கைகளை வைத்தபடி கண்ணீர் மல்க விஜய் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா மற்றும் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.


Next Story