கந்த சஷ்டி விழா கோலாகலம்: ஜெயந்தி நாதர், வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்


கந்த சஷ்டி விழா கோலாகலம்: ஜெயந்தி நாதர், வள்ளி, தெய்வானைக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 17 Nov 2023 6:27 AM (Updated: 18 Nov 2023 2:49 AM)
t-max-icont-min-icon

சூரசம்ஹாரத்தையொட்டி, திருச்செந்தூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர்,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் திருநாளான இன்று அதிகாலைநடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

அதனை தொடர்ந்து காலையில் உச்சிகால அபிஷேகம், யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை (சனிக்கிழமை) மாலையில் நடக்கிறது. சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சூரசம்ஹாரத்தையொட்டி, திருச்செந்தூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

1 More update

Next Story