பங்காருபேட்டை தாலுகாவில்: விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


பங்காருபேட்டை தாலுகாவில்:  விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x

பங்காருபேட்டை தாலுகாவில் விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் ரூ.20 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமாகின. காட்டுயானைகள்

கோலார் தங்கவயல்:

தமிழ்நாட்டுக்கு உட்பட்ட வனப்பகுதியிலிருந்து வரும் காட்டு யானைகள் கர்நாடக எல்லைப்பகுதியான கோலார் மாவட்டம் பங்காகருபேட்டை தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகள் அங்குள்ள விளை நிலங்களையும், பயிர்களையும் தொடர்ந்து நாசப்படுத்தி வருகின்றன. அட்டகாசம் செய்து வரும் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் தமிழக வனப்பகுதியில் இருந்து வந்த காட்டுயானைகள் பங்காருபேட்டை தாலுகா தொணேமடகு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புகுந்து சுமார் 8 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த தக்காளி, வாழை, கடலைக்காய், ராகி உள்ளிட்ட ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான விளைப்பயிர்களை நாசப்படுத்தி உள்ளது.

விளைபயிர்கள் நாசம்

நேற்று முன்தினம் இரவு 10-க்கும் மேற்பட்ட யானைகள் கொண்டேனஹள்ளி கிராமத்திற்குள் பகுந்த வெங்டேஷ் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த தக்காளி சாகுபடிகளை நாசப்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்தறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கபபடும் என்று உறுதி அளித்தனர்.


Next Story