விநாயகர் சதுர்த்தி: சிலை பிரதிஷ்டை, பூஜைக்கு உகந்த நேரம்


விநாயகர் சதுர்த்தி 2024: சிலை பிரதிஷ்டை, பூஜை செய்ய நல்ல நேரம்
x

நாளை காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை நல்ல நேரம் இருப்பதால் அந்த நேரத்தில் விநாயகர் வழிபாட்டை தொடங்கலாம்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி, நாளை (7.9.2024) கொண்டாடப்படுகிறது. விநாயகரை வழிபடுவதற்கு அற்புதமான நாள் இந்த நாள். பொது இடங்களிலும், வணிக நிறுவனங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படும். வீடுகளிலும் தங்கள் வசதிக்கு ஏற்ப சிறிது முதல் பெரிய அளவிலான பிள்ளையார் சிலைகளை வாங்கி பூஜை செய்வது வழக்கம்.

விநாயகர் வழிபாட்டிற்கு உகந்த வளர்பிறை சதுர்த்தி திதி, நாளை (7.9.2024) பிற்பகல் 3.38 மணி வரை இருக்கிறது. எனவே விநாயகருக்குச் செய்யவேண்டிய பிரதான பூஜையை காலையிலேயே செய்யவேண்டும். குறிப்பாக, காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை நல்ல நேரம் இருப்பதால் அந்த நேரத்தில் விநாயகர் வழிபாட்டை தொடங்குவது கூடுதல் பலன் தரும்.

காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டமும் வருகிறது. இந்த நேரத்தில் பூஜை செய்யாமல் இருப்பது நல்லது.

1 More update

Next Story