சென்னை இஸ்கான் கோவிலில் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா.. விரிவான ஏற்பாடுகள்


சென்னை இஸ்கான் கோவிலில் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா
x

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுவையான பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில் இரண்டு நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.

நாளை அதிகாலை 4.30 மணிக்கு பூஜையுடன் விழா தொடங்குகிறது. குருபூஜை, ஸ்ரீமத் பாகவதம் வகுப்புகள், மகா அபிஷேகம், கீர்த்தனைகள் என நள்ளிரவு 12.30 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. நாளை மறுநாள் (27-ம் தேதி) காலைமுதல் பிற்பகல் வரை அபிஷேகம், சிறப்பு வகுப்புகள் நடைபெறுகின்றன. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுவையான பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும், பூஜைகள், வழிபாட்டிற்குத் தேவையான அகர்பத்தி, விக்ரகங்கள், உடைகள், குழந்தைகளுக்கான உடைகள், பைகள், அணிகலன்கள் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்கள் விற்பனையும் நடைபெறும். இதற்காக பிரத்யேக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ண ஜெயந்தி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், விசாலமான பார்க்கிங் வசதி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story